ஆய்வு செய்ய தாய்மார்களுக்கு உரிமை 7 ஆண்டுகளாக தூங்கும் அன்னையர் குழு அரசாணை: மவுனம் சாதிக்கும் பள்ளிக்கல்வித்துறை

  |   Tiruvallurnews

திருவள்ளூர், அக். 9: பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, கற்பித்தல், ஆய்வக செயல்பாடுகள் குறித்து, சமூக ஆய்வு நடத்தவும், நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பவும், தாய்மார்களுக்கு உரிமை இருப்பதாக அரசாணை வெளியிட்டு, 7 ஆண்டுகள் ஆகியும் அதனை நடைமுறைப்படுத்தாமல். பள்ளிக்கல்வித்துறை மவுனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், 56,828 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பள்ளிகள் உள்ளன. அனைத்து வகை பள்ளிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்படுகிறது. இதுதவிர, மாணவர்களின் தாய்மார்களை ஒருங்கிணைத்து, அன்னையர் குழு உருவாக்கி, சமூக ஆய்வு நடத்த பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என, கடந்த 2012 ல் அரசாணை (எண்: 270) வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சுயநிதி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், அரசு ஊழியர் அல்லாத, தாய்மார்கள் பார்வையிடலாம் என குறிப்பிட்டுள்ளது. இப்படியொரு அரசாணை வெளியிடப்பட்டதே, 99 சதவீதம் பெற்றோருக்குத் தெரியாது என்பதே யதார்த்த நிலை. அரசாணை வெளியாகி, 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தப் பள்ளியிலும் அன்னையர் குழு அமைத்ததாகத் தகவல் இல்லை....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/_7JirAAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬