உங்க உயிருக்கு.. நாங்க பொறுப்பல்ல..! மின்வாரிய அலட்சிய கடிதம் அச்சத்தில் கிராம மக்கள்
செய்யூர், அக். 9: மதுராந்தகம் பகுதியில் வீடுகள் மீது குறைந்த மின் அழுத்த மின்சார கம்பிகள் செல்கின்றன. இதுகுறித்த நடவடிக்கை எடுக்காமல், மின் விபத்து ஏற்பட்டால், 'உங்க சாவுக்கு, நாங்கள் காரணமில்லை' என்பதை போல் மின் வாரியம் அலுவலகம் அலட்சியமாக கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், உயிர் பீதியடைந்த மக்கள், அரசு நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சி, காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீது, கடந்த 30 ஆண்டுகளாக குறைந்த அழுத்த மும்முனை மின்கம்பிகள் செல்கின்றன. வீட்டின் மொட்டை மாடியில் நின்றால், கைக்கு எட்டும் உயரத்தில் குறைந்த அழுத்த மின்வயர்கள் அமைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் உயிர் பயத்தில் அச்சத்துடன் வாழ்கின்றனர். மேலும், இங்குள்ள குடிசை வீடுகள் மீதும் மின்வயர்கள் செல்வதால், பலத்த காற்று வீசும்போது, மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு, அடிக்கடி தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/szV8kwAA