காஞ்சிபுரம் மாவட்டத்தில் 180 பேருக்கு டெங்கு பாதிப்பு: 2 பேர் பலி - பொதுமக்கள் பீதி

  |   Kanchipurannews

காஞ்சிபுரம், அக்.9: காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகமெங்கும் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு அறிகுறி தெரிந்ததும், அவர்களுக்கு தனியாக அறை அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர், தாம்பரம், மதுராந்தகம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 180க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதீத காய்ச்சலுடன் 1300 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த 2 ம் வகுப்பு மாணவி மெகரீன் (7) என்ற சிறுமி காய்ச்சல் வாந்தியா ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தாள். அதேபோல் வண்டலூர் அருகே ஒரு பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலால் இறந்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குழந்தைகள் வார்டில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரத்தம், சிறுநீர் உட்பட பல பரிசோதனைகள் செய்யப்படுகிறதே தவிர, என்ன காய்ச்சல் என மருத்துவர்கள் கூற மறுக்கின்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/4cSX9AAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬