கூடலூர்-நிலம்பூர் பஸ் ரத்து மீண்டும் இயக்க கோரிக்கை

  |   Nilgirisnews

ஊட்டி, அக். 9: நீலகிரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகள் கேரள மாநில எல்லையில் உள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பல்வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். அதேபோல், அங்கிருந்தும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக, கூலித் தொழிலாளர்கள் அதிகளவு இரு மாநிலங்களிடையே பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். தினமும் பல ஆயிரம் மக்கள் இவ்விரு மாநில எல்லைகளில் உள்ள ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலும் தமிழக மற்றும் கேரள மாநில அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கூடலூரில் இருந்து நிலம்பூர், சுல்தான் பத்தேரி, கள்ளிக்கோட்டை, மலப்புரம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழக - கேரள எல்லையில் கொட்டி தீர்த்த மழையால், பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டது. கூடலூர்-நிலம்பூர் சாலையும் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே ஒரு மாதத்திற்கு மேலாக இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், அனைத்து வாகனங்களும் இதன் வழியாக செல்ல துவங்கியுள்ளன. கேரள மாநில அரசு பஸ்சும் சென்று வருகிறது. ஆனால், கூடலூரில் இருந்து நிலம்பூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் இன்னும் இயக்கப்படவில்லை. இந்த பஸ் மாலை 6 மணிக்கு புறப்பட்டு நிலம்பூர் செல்லும். மீண்டும் மறுநாள் காலை 6 மணிக்கு நிலம்பூரில் இருந்து புறப்பட்டு கூடலூருக்கு வரும்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/od6_oAAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬