🌊கடல் அமலாக்கப்பிரிவு உருவாக்கப்படவுள்ளதாக🎉 அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு🔈

✍இளவேனில்🌄

🏛சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் வன வார விழாவின் இறுதிநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு, விழாவில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு 🎁பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் 📰செய்தியாளர்களை சந்தித்து, "📆2021ம் ஆண்டிலும் மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். கீழடியில் 🏛மாநில அரசின் சார்பில் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது😯" என்று கூறினார். மேலும், 😎ரஜினி குறித்த ⭐ராதாரவியின் பேச்சுக்கு🗣 பதிலளித்த அவர், யார் 💺முதலமைச்சராக வரவேண்டும்⁉என 👥மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், 🌊கடல்வளத்தையும் 🐠மீன் வளத்தையும் பாதுகாக்கும் வகையில், கடல் அமலாக்கப்பிரிவு உருவாக்கப்பட உள்ளதாகவும்👍 தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬