காமராஜர் மார்க்கெட் அருகில் வாய்க்காலில் கழிவு நீர் தேக்கத்தால் சுகாதார சீர் கேடு

  |   Karurnews

கரூர், அக். 9: கரூர் மார்க்கெட் அருகே வாய்க்காலில் கழிவுநீர் தேக்கத்தினால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி விட்டது. வாய்க்காலில் கழிவுநீர் செல்கிறது. கடந்த சில வாரங்களாக கழிவுநீர் வாய்க்காலில் ஓட்டம் இன்றி தேங்கி கிடக்கிறது. இதனால் மார்க்கெட் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கொசு, ஈத்தொல்லை அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் போன்ற கழிவுகள் வாய்க்காலில் கொட்டப்படுவதால் கழிவுநீர் தேங்கி விடுகிறது. அவற்றை அகற்றி குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டால்தான் கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வப்போது இயந்திரம் மூலம் கழிவுபொருட்களை அகற்றுகின்றனர். இது நிரந்தர தீர்வாக இல்லை. வாய்க்காலை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதார கேட்டை போக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Kfql0QAA

📲 Get Karurnews on Whatsapp 💬