கிருஷ்ணா கால்வாயில் சிறுவனை காப்பாற்றியபோது மாயமான மாணவர் சடலம் மீட்பு

  |   Tiruvallurnews

ஊத்துக்கோட்டை, அக். 9: கிருஷ்ணா கால்வாயில் குளிக்கும்போது தண்ணீரில் சிக்கிய சிறுவனை மீட்டு கரையில் சேர்த்த மாணவர் திடீனெ மாயமானர். அவரை சடலமாக போலீசார் மீட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கோபி. டிரைவர். இவரது மகன் ஜெகதீசன் (19). இவர், சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு தந்தை கோபியுடன் துக்க நிகழ்ச்சிக்கு ஜெகதீசன் சென்றனர். பின்னர், அங்கிருந்து ஜெகதீசன், தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி பகுதி கிராமப்புறங்களை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அங்கு ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயை பார்த்ததும் ஆகாஷ் (9) குளிக்க இறங்கி உள்ளான். அவனை கால்வாயில் வேகமாக செல்லும் தண்ணீர் இழுக்க தொடங்கியது. இதை பார்த்த ஜெகதீசன் கால்வாய்க்குள் குதித்து ஆகாஷை தூக்கி கரையில் விட்டார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/j9iWIwAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬