குறிஞ்சிப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை

  |   Cuddalorenews

நெய்வேலி, அக். 9: குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசுக்கு சொந்தமாக நான்கு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறிஞ்சிப்பாடியில் உள்ள அண்ணாநகர், விழப்பள்ளம், பொட்டவெளி, விருப்பாச்சி, கண்ணாடி, புவனகிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை சில தனி நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருகின்றனர். இங்குள்ள அரசு மதுபான கடைகளில் மொத்தமாக பாட்டில்களை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் புதுச்சேரி மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மது விற்பனையால் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு பகலாக மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் குடித்துவிட்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிக வேகமாக செல்லும்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே குறிஞ்சிப்பாடி பகுதியில் சட்டவிரோதமாக பிளாக்கில் மதுபானம் விற்பவர்கள் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ZBo1YgAA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬