கள்ளக்காதல் விவகாரத்தில் மோதல் திருச்சி கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு போலீசார் விசாரணை
திருச்சி, அக்.9: திருச்சி பொன்மலை ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் வீராசாமி, ரயில்வே ஊழியர். இவரது மகன் கோபால்சாமி(18). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். வீராசாமியின் வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், வீராசாமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சூசைநாதன் மகன் சுரேஷ்(35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. சுரேஷ் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். வீராசாமிக்கு இது தெரியவந்ததும் அவர் சுரேஷை கண்டித்தார். இனி என் வீட்டுக்கு வரக்கூடாது என்றும் எச்சரித்தார். மேலும் வீட்டை காலி செய்யுமாறு வடமாநிலத்தவரை கேட்டுக்கொண்டார்.
இது தெரியவந்ததும் நேற்று முன்தினம் இரவு சுரேஷ், வீராசாமி வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறு செய்தார். வீட்டை காலி செய் என்று அந்த பெண்ணிடம் எப்படி கூறலாம் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த கோபால்சாமி தனது தந்தைக்கு ஆதரவாக பேசினார். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. கோபால்சாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுரேஷை குத்தினார். இதில் சுரேஷின் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பதிலுக்கு சுரேஷ் தனது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து கோபால்சாமியை வெட்டினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோபால்சாமி தனியார் மருத்துவமனையிலும், சுரேஷ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து பொன்மலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/7NmXPgEA