கீழக்கரையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

  |   Ramanathapuramnews

கீழக்கரை, அக்.9: கீழக்கரை ஹமீதியா தொடக்க, மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய், சவுதி போன்ற வெளிநாடுகளில் தொழில் செய்து வரும் முன்னாள் மாணவர்கள் கீழக்கரையில் வந்து பங்கேற்றனர்.மஜீத் சலீம் தலைமை வகித்தார். வடக்குத்தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முகம்மது மற்றும் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் சதக் இலியாஸ் வரவேற்றார். இதில் சதக் இலியாஸ் பேசுகையில், இந்த பள்ளி 1870ல் ஹமீதியா மதார்ஸாவாக தொடங்கப்பட்டு 1938ல் அங்கீகாரம் பெற்ற பள்ளியாக மாறியது.

1944ல் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு இன்று வரை நல்ல முறையில் பல பட்டதாரிகளை உருவாக்கி கொண்டிருக்கின்றது. இந்த பள்ளியில் படித்த பலர் இன்று பல தொழில் அதிபர்களாக திகழ்கின்றனர் என்றார். சதக் இஸ்மாயில் பேசுகையில், இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தொடக்கமே. வரும் டிசம்பர் 25,26ல் சர்வதேச அளவில் உள்ள அனைத்து முன்னாள் மாணவர்களும் பங்கேற்கும் மெகா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். முன்னாள் மாணவர்கள் தற்போது செய்யும் தொழில் சம்மந்தமான கண்காட்சியும் நடைபெறும் என்றார். ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் கபீர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/fea8DgAA

📲 Get Ramanathapuramnews on Whatsapp 💬