கோவையில் சிறைக்கைதிகள் நடத்தும் டீக்கடை

  |   Coimbatorenews

கோவை மத்திய சிறையில் சிறை கைதிகளால் நடத்தப்படும் டீக்கடை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்த விலையில் டி, வடை, போண்டா ஆகியவை விற்கப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இங்கு பணி அமர்த்தப்படுகின்றனர். இந்த கடைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிறைக்கு கைதிகளை காண்பதற்கு பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர், இவர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேக்கரி கடை வைக்கப்பட்டுள்ளது. இது 2-வது தின்பண்டகடையாகும். இங்கு டீ, காபி மற்றும் போண்டா, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள், பேக்கரி பொருட்கள் சிறைத்துறை நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 3 தண்டனை கைதிகள் இங்கு பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வாரத்தில் 5 நாட்கள் இந்த சிறை பஜார் திறந்து இருக்கும்.

போட்டோ - http://v.duta.us/pAISXwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/tqoX1AAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬