கோவையில் மருத்துவ மாணவர்கள் உள்பட 13 பேருக்கு டெங்கு காய்ச்சல்

  |   Coimbatorenews

கோவையில் மருத்துவ மாணவர்கள் உள்பட 13 பேர் டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 140 பேர் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை கடந்த சிலநாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் வெளுத்து வாங்கியது.

இதனால் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சீதோஷ்ண நிலை திடீரென மாறியதால் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதியடைந்துள்ளனர். இதற்காக நாள்தோறும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் மாவட்டத்தில் தலைதூக்கியுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் 2 மருத்துவ மாணவர்கள் உள்பட 13 பேர் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் சாதாரண காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 153 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.

வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

போட்டோ - http://v.duta.us/AGbdFwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/L0T-QwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬