கோவை வெள்ளலூர் குளக்கரையில் பனை நாற்றுப்பண்ணை அமைக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள்

  |   Coimbatorenews

கோவை வெள்ளலூர் குளக்கரையில் பனை நாற்றுப்பண்ணை அமைக்கும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் சீரமைக்கும் களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி வெள்ளலூர் குளத்தை ஒரு முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சி ஈடுபட்டுவருகின்றனர். இந்த குளத்தின் கரையில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, அதனருகே மூலிகை வனமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளலூர் குளக்கரையில் பனை நாற்றுப்பண்ணை அமைக்கும் முயற்சியில் கடந்த 1 மாதமாக தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9.30 மணிவரை இந்த களப்பணிகள் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது. 139-வது வரமாக நடைபெற்ற இந்த களப்பணியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

காய வைக்கப்பட்ட பனை விதைகளை பெரியவர்கள் முதல் சிறார் வரை கலந்து கொண்டு நாற்றுப் பைகளில் இட்டு தயார் செய்தனர். வந்திருந்த தன்னார்வலர்களுக்கு களப்பணி முடிந்தவுடன் நீர்நிலை சார்ந்த தகவல்கள் பரிமாறப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/0F9hrQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/VphG5wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬