சசிகலா ⛓சிறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை😨 என்று அறிக்கை📜

✍இளவேனில்🌄

💸சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 💺ஜெயலலிதாவின் தோழி 👵சசிகலா பெங்களூரு 🏛மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்😯. சிறையில்⛓ இருக்கும் இவர் கடந்த 📆ஜூலை 7ம் தேதி 2017ம் ஆண்டில், சட்டத்துக்குப் புறம்பாக, சிறையிலிருந்து வெளியே சென்று 🛍ஷாப்பிங் சென்றார் என்று 📹வீடியோ பதிவுகள் வெளியாகின. மேலும், கர்நாடகா சிறைத்துறை 👮டி.ஜி.ஜி ரூபா, சசிகலா விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுகின்றன😳 என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து விசாரணைக்🗣 குழு👥 ஆய்வு👀 நடத்தியது. அந்த அறிக்கையில்📜, "சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்துள்ளார்😱. சிறைத்துறை அதிகாரி 👮சத்யநாராயணராவ்வுக்கு 💰2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். இரவு உடையில் சசிகலா சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்😐" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஆதாரமாக 📹சி.சி.டி.வி காட்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன👍" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬