சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் சாலை பணிக்காக அனுமதி பெறாத இடங்களை அபகரிக்க முயற்சி

  |   Cuddalorenews

சேத்தியாத்தோப்பு, அக். 9:சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் விகேடி நெடுஞ்சாலை பணிக்காக அனுமதி பெறாத இடங்களையும் அபகரிக்க உள்ளதாக பொதுமக்கள், வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம். இக்கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், பொதுமக்களும் வசித்து வருகின்றனர். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது குமாரக்குடி கடைவீதி. இதனருகே குடியிருப்புகளும் உள்ளது. விகேடி சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே இடங்கள் அளவீடு செய்யப்பட்டு இடையூறாக இருந்த வீடுகள், திருமண மண்டப கட்டிடங்கள் சென்ற மாதம் அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்போடு இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. அதன் பின்பு சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திடீரென எந்தவித முன் அனுமதி பெறாமல் குமாரக்குடி மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடை கட்டிடங்களையும், குடியிருப்புகளையும், இடித்து அகற்ற நகாய் திட்ட நெடுஞ்சாலை பணியாௗர்கள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/BN28hwAA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬