சென்னையில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 2 இளைஞர்களிடம் விசாரணை: மதுரவாயில் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு இருப்பதாக போலீசார் தகவல்

  |   Chennainews

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் வாடகை வீடு கேட்ட 2 நைஜீரிய இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர், சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதனால் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வீட்டில் 2 நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர்கள் வீடு வாடகைக்கு வேண்டும் என கூறியுள்ளனர்.

அதற்கு வீட்டின் உரிமையாளர் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என கூறிய நிலையில் அவர்களிடம் எந்த விதமான ஆவணமும் இல்லாத சூழ்நிலையில் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த 2 கல்லூரி மாணவர்களை கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இருவரும் படித்து வருவதாக கூறியுள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/GhboZAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/WnNNeQAA

📲 Get Chennainews on Whatsapp 💬