✈சீன 🤵அதிபருக்கு உற்சாக வரவேற்பு💐 அளிக்க 🏛தமிழக 💺முதல்வர் வேண்டுகோள்🙏

✍இளவேனில்🌄

🇮🇳இந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் 🤵ஜின்பிங், பிரதமர் மோடியை சந்திக்கிறார்👀. இந்த 👀சந்திப்பு, 📆அக்டோபர்., 11, 12 தேதிகளில் சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது👍. இதை முன்னிட்டு🎉 அப்பகுதியில் வரலாறு காணாத வகையில் 💪பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழக 💺முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, "தமிழகத்திற்கு வருகைத் தரும் சீன அதிபர் 🤵ஜின்பிங்கிற்கு, தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு 😍உற்சாக வரவேற்பு💐 அளிக்க வேண்டும். பல்லவ நாட்டின் துறைமுகமாக இருந்த 🏛மாமல்லபுரம் தேர்வு செய்தது பொருத்தமாக இருக்கும்😯. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு 🏛தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு 🙏நன்றி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே 💸வணிக, கலாச்சார தொடர்பு இருந்து வந்தது. இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை🗣 நடத்துவதால் தமிழகத்தின் மதிப்பு 🌎உலக அரங்கில் உயர்ந்துள்ளது⏫" என்று அறிக்கையில்📜 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬