சீன 🤵அதிபர் 🏛மாமல்லபுரம் வருகை-👥திபெத்திய மாணவர்கள் சங்கத் தலைவர் டென்சில் நோர்பு கைது⛓

✍இளவேனில்🌄

✈சீன அதிபர் 🤵ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும்👀 நிகழ்வு 🏛தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது🎉. இந்நிலையில், சீன அரசு திபெத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி😳, வெளிநாடுகளில் வசிக்கும் திபெத் நாட்டினர் சீன அதிபரின் வெளிநாடு சுற்றுப் பயணங்களின்போது அவருக்கு எதிராக 😡ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இந்தநிலையில் இரு 📆தினங்களுக்கு முன்பு சென்னையில் தங்கியுள்ள திபெத் நாட்டினர் குறித்த விவரங்களை சேகரித்த 🏛சேலையூர் 👮காவல்நிலைய போலீசார், கிழக்கு தாம்பரம் பகுதியில் 👥திபெத் மாணவர்களின் அறைகளில் சோதனை👀 செய்ததில், சீன அதிபருக்கு 😡எதிரான போஸ்டர்களை ✍எழுதிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள், ஒரு மாணவி உள்ளிட்ட 👥8 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் 💪போராட்டம் நடத்த இருந்ததை உறுதிசெய்த போலீசார், கைது செய்து 🏛நீதிபதி 🏡வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில்⛓ அடைத்தனர். இதனிடையே, 🏛புதுச்சேரி மாநிலம் ஆரோவில் அருகே திபெத் நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்😨. அவரும் சீன அதிபருக்கு சிவப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருந்ததால், அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்😯. மேலும், திபெத்திய மாணவர்கள் சங்கத் தலைவர் டென்சில் நோர்பு அதிரடியாக 🏛நீலாங்கரை 👮போலீசாரால் கைது⛓ செய்யப்பட்டுள்ளார்👍. திபெத் மாணவ மாணவிகள் தங்கள் அறைகளில் வெளி நபர்களை தங்க அனுமதிக்கக்கூடாது🚫 என போலீசார் எச்சரிக்கை⚠ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬