சிவன்மலையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி

  |   Tiruppurnews

காங்கயம்,அக்.9:காங்கயம் அருகே சிவன்மலை அடிவாரத்தில் உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர் மலை அடிவாரத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பேபி (37).மகள் வர்ஷினி (6). சிறுமி சிவன் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். ஞாயிற்றுக்கிழமை மாலை வர்ஷினிக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது. தொடர்ந்து இரவு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் திங்கட்கிழமை சாவடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் மருந்து மாத்திரை கொடுத்தும் ,காய்ச்சல் சரியாகவில்லை. இதையடுத்து, சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே வர்ஷினி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.சிறுமி மர்ம காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் நோய் தடுப்பு நடமாடும் மருத்துவமனை வாகனத்துடன் முகாமிட்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/32_DHQAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬