சுவாமிதோப்பில் சாமி தரிசனம் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அய்யா வழி பாலபிரஜாபதியுடன் சந்திப்பு
நெல்லை, அக். 9: நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சுவாமிதோப்பு அய்யா வழி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அய்யா வழி பாலபிரஜாபதியை சந்தித்து ஆதரவு கேட்டதோடு, பிரசாரத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
நாங்குநேரி சட்டசபைக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் அய்யா வழி மக்களிடையே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஏற்கனவே ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் சுவாமி தோப்பு அய்யா வழி அன்புவனத்திற்கு சென்றார். அங்கு முறைப்படி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அய்யா வழி பாலபிரஜாபதியை சந்தித்து ரூபி மனோகரன் ஆதரவு கேட்டார். தொகுதியில் பிரசாரத்திற்கும் அவரை அழைத்தார். அன்பு வனத்தில் உள்ள நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேசினார். பின்னர் ரூபி மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அய்யா வழிக்கும் எனக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. அய்யா வைகுண்டரின் கொள்கைகளை நான் எப்போதுமே மதித்து நடப்பவன். அவரது கருத்துக்கள் எளிமையானவை. அதேபோல் அய்யா வழி பக்தர்களும் எளிமையையும், நேர்மையையும் கடைப்பிடிக்கின்றனர்....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/PfyUWgAA