திட்டக்குடியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

  |   Cuddalorenews

திட்டக்குடி, அக். 9: திட்டக்குடி அடுத்துள்ள ஆவினங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மங்களூர் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மங்களூர் ஒன்றிய செயலாளர் சின்னதுரை, துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமசாமி, சொக்கலிங்கம் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்தின் அனைத்து வரத்து வாய்க்கால்களையும் அகலப்படுத்தியும், ஆழப்படுத்தவும் நீர் தேக்கத்தில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி தூர்வார வேண்டும். வையங்குடி, சிறுமுளை, இடைச்செருவாய், கொரக்கை ஆகிய பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். பல்வேறு கிராமங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சேவை மையங்களை செயல்படுத்த வேண்டும். திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இலவச சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும், அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர் அனைவருக்கும் போதிய வேலை தரவேண்டும், திட்டக்குடியில் போக்குவரத்து மற்றும் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Ex0F9AAA

📲 Get Cuddalorenews on Whatsapp 💬