தனியார் பள்ளி மோகத்தால் விஜயதசமியில் அரசு பள்ளியில் மழலையர்கள் சேர்க்கை மந்தம்

  |   Ramanathapuramnews

பரமக்குடி, அக்.9: விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகளின் மேல் உள்ள மோகத்தால், பரமக்குடியில் அரசு மழலையர் பள்ளியில் சேர்க்கை மந்த நிலையில் நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என்று பொருளாகும். விஜயதசமி நாளன்று குழந்தைகளை பள்ளிகளி-்ல் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் நிலவுகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர். விஜயதசமியை முன்னிட்டு மழலையர் பள்ளிகளில் இன்று குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்பட்டது. ஆனால், பரமக்குடி கல்வி மாவட்டத்தில், பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகளில் உள்ள மோகத்தால் அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் மழலையர் சேர்க்கை களைட்டியது. ஆனால், அரசு பள்ளிகளில் மழலையர் சேர்க்கை மந்த நிலையில் இருந்தது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொடக்கபள்ளி, நடுநிலை பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட வில்லை....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/eot4FwAA

📲 Get Ramanathapuramnews on Whatsapp 💬