தனி விமானத்தில் வந்த சீன 🤵அதிபரின் 🚗கார்கள்👍

✍இளவேனில்🌄

வரும் 📆வெள்ளிக்கிழமை பிற்பகல் ⌚1.30 மணிக்கு சென்னை ✈விமான நிலையம் வரும் சீன அதிபர் 🤵ஸீ ஜின்பிங் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள 🏢ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்குச் செல்கிறார். அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு அவர் புறப்படுகிறார். 🔫குண்டு துளைக்க முடியாத சொகுசு காரில் அவர் பயணிக்க உள்ளார். அவருடன் வரும் 👥குழுவும், குண்டு துளைக்க முடியாத காரில் பயணிக்க உள்ளது👍. இதற்காக ஹாங்கி எல் 5 என்ற 4 சொகுசு கார்கள், தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டன. 🛩ஏர் சைனா B747 என்ற சரக்கு விமானத்தில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட அந்த நான்கு 🚗கார்களும் செவ்வாய் கிழமை இரவு ⌚7 மணி அளவில் விமான நிலையத்தில் இறக்கப்பட்டன😯. உடன் வந்த சீன அதிபரின் 💪பாதுகாப்புக் குழுவினர், 🇮🇳இந்திய அதிகாரிகளையும், விமான நிலைய 🤵அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்போது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக கேட்டறிந்தது👂 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬