தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்க மாவட்டத்தில் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

  |   Erodenews

ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி திருட்டு சம்பவங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் கடை வீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு மாநகர பகுதிகளில் பன்னீர்செல்வம் பார்க், கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, ஆர்.கே.விரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளுக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய சப்-டிவிசன் பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பிக்பாக்கெட், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/B_yMUgAA

📲 Get Erodenews on Whatsapp 💬