தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சென்னை: தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. 2 நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தங்கும் இடம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் இருநாட்டு அதிகாரிகள் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சியாக்க மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல நுற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக கலாச்சார ரீதியான தொடர்பு இருந்தது. சீனப் பயணியான யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது பொருத்தமானது....
போட்டோ - http://v.duta.us/-hn4pQEA
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/26NHtQAA