திருப்பூரும்... கருணாநிதியும்!

  |   Coimbatorenews

திருப்பூர் இன்று சர்வதேச அளவில், ஏற்றுமதி தொழில் நகரமாக விளங்குகிறது. பின்னலாடை துறையினர் மற்றும் தொழிலாளர்களின் அளவு கடந்த உழைப்பால், 'டாலர் சிட்டி' என்று அழைக்கப்படுகிறது.

திருப்பூரின் வளர்ச்சியில், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தி.மு.க., ஆட்சியின் போதுதான், திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 52 வார்டுகளுடன் இருந்த நகராட்சியை மாநகராட்சியாக, தரம் உயர்த்தி அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

அதற்கான விழா, 2007ல், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. பங்கேற்ற கருணாநிதி, திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் என மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்தார். அதன்படி, 2009ல், திருப்பூர் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தது. மடத்துக்குளம் தாலுகா உள்ளிட்ட வருவாய்த் துறை மாற்றங்களும், கருணாநிதியால் திருப்பூர் மாவட்டத்துக்கு ஏற்படுத்தப்பட்டது.

மிக குறுகலாக இருந்த திருப்பூர் ரயில்வே மேம்பாலம் கருணாநிதி ஆட்சியின் போது தான் அகலப்படுத்தி புதிதாக கட்டப்பட்டது. அதே போல், ஊத்துக்குளி, வஞ்சிபாளையம் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள், அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை....

போட்டோ - http://v.duta.us/mnhWEwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/0QBaKAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬