திருமானூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்புபொதுமக்கள் அவதி

  |   Thanjavurnews

தஞ்சை, அக். 9: திருமானூரில் இருந்து தஞ்சை நகர பகுதிக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் அசுத்த நீர் கலப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 51 வார்டு மக்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத குழாய் போடப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு பம்பிங் ஸ்டேஷன் பகுதிக்கு வந்து, பின்னர் வெண்ணாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாநகர பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அரசூர் கிராமத்தில் கோரையாறு வாய்க்கால் வழியாக செல்லும் குடிநீர் குழாய் கடந்த ஒரு மாதத்துக்கு முன் உடைந்தது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது கொள்ளிடம் குழாய் உடைந்துள்ளதால் அதிலிருந்தும் தண்ணீர் வெளியேறி வருகிறது. குழாயில் தண்ணீர் நிற்கும்போது வாய்க்காலில் உள்ள தண்ணீர் குழாயுக்குள் செல்லும் அபாய நிலை உள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gsWW6QAA

📲 Get Thanjavurnews on Whatsapp 💬