திருவண்ணாமலை நகராட்சியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

  |   Vellorenews

திருவண்ணாமலை, அக்.9: திருவண்ணாமலையில் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடப்பதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ள சோமவாரக்குளத் தெருவில் குப்பை தொட்டிகள் நகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது. இந்த குப்பை தொட்டிகளில் இருந்து நேற்று குப்பை கழிவுகள் அக்கறப்படாமல் குவிந்து கிடந்தது. சில பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பை கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்காததால், குப்பை கழிவுகளை கால்நடைகள், நாய்கள் இழுத்து சென்று சாலையில் விட்டு செல்கின்றன.

அதேபோல், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள நகராட்சி குப்பை தொட்டியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் நிறைந்துள்ளதையும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றாததால் தேங்கி கீழே கொட்டி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இந்த நிலை நாள் தோறும் நிலவி வருகிறது. எனவே வரும் நாட்களிலாவது குப்பை கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/VI1RlAAA

📲 Get Vellorenews on Whatsapp 💬