திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை தொடங்கி வைத்தார் ஆட்சியர் மகேஸ்வரி
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மழை காலத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சல் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய பின்னரே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வெப்பசலனம், வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் என பல்வேறு காரணங்களால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் வழக்கமாக பதிவாகும் மழையை விட கூடுதல் மழை பதிவாகியுள்ளது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசு முட்டையிட்டு வளர காரணமாகி விடுகிறது. இதனிடையே டெங்குவை கட்டுப்படுத்துவதில் அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்....
போட்டோ - http://v.duta.us/772KwgAA
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/hktO1wAA