நாங்குநேரி தொகுதியில் காங், வெற்றி பிரகாசமாக உள்ளது

  |   Tirunelvelinews

நெல்லை, அக். 9: நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதால் எங்களது வெற்றி பிரகாசமாக உள்ளது என வசந்தகுமார் எம்பி தெரிவித்தார். இதுகுறித்து நெல்லையில் வசந்தகுமார் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த 2011-2016ம் ஆண்டு வரை காங்., கட்சியை சேர்ந்த லெக்கான் சேர்மனாக இருந்தார். நெல்லை தொகுதியில் காங்.,கட்சியை சேர்ந்த ராமசுப்பு கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து லெக்கான் போட்டியிட்டதால் அவர் காங்.,கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அர்த்தமாகும். ஆனால் அவர் காங்.,கட்சியில் இருப்பது போன்று காட்டிக்கொண்டு நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி காங்.,வேட்பாளர் ரூபி மனோகரனிடம் சில கோரிக்கைகளை வைத்தார். அதற்கு அவர் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் நான் முடிவு செய்ய முடியாது என மறுத்து விட்டார்.

இதனால் அவர் அதிமுக அமைச்சர்களிடமும் அதே கோரிக்கைகளை வைத்தார். அதற்கு அவர்கள் சம்மதித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறுகின்றனர். அதிமுக கட்சிக்கு அவர் சென்றதால் காங்.கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. எங்களது வெற்றி 100 சதவீதமாகும். நாங்குநேரி தொகுதியில் நான் எம்எல்ஏவாக கடந்த மூன்று ஆண்டுகள் இருந்தேன். அப்போது அந்த தொகுதியில் எட்டு ஆண்டுகளில் செய்ய வேண்டிய வேலைவாய்ப்பு, சாலைகள் அமைத்தல், குளங்கள் மராமத்து, அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துள்ளேன்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/pPXF4AAA

📲 Get Tirunelvelinews on Whatsapp 💬