நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும் வணிகர்களுக்கு கலெக்டர் அறிவுறத்தல்

  |   Nagapattinamnews

நாகை, அக்.9: உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் கூறினார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மேம்பாட்டுக் குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்து பேசியதாவது: உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006ன் படி உரிமம் பெற்று இருக்க வேண்டும். மாவட்டத்தில் 100 சதவீதம் இலக்கு அடைவதற்கு வர்த்தக சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உரிமம் பெற்ற உணவகங்களும் பயிற்சி பெற்று சான்று பெற்றிருக்க வேண்டும். போலியான அயோடின் இல்லாத இந்து உப்பு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு, உப்பு உற்பத்தியாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பொட்டலமிட வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உப்பளங்களில் ஆய்வு செய்து போலி முகவரியில் உப்பு பாக்கெட்டுகள் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைத்து உணவு தயாரிப்பு கூடங்கள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு உணவு தரத்தை உறுதி செய்யவும், மேம்படுத்திடவும் வேண்டும். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் தரம் குறைபாடு மற்றும் கலப்படம் போன்ற உணவு பாதுகாப்பு தொடர்பாக நுகர்வோர் அமைப்புக்கு 94440 42332 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார். டிஆர்ஓ இந்துமதி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், வர்த்தசங்கம், வர்த்தகபேரவை, நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/QItgHwAA

📲 Get Nagapattinamnews on Whatsapp 💬