நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

  |   Chennainews

சென்னை: நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஉள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அநேகமாக வருகிற 20-ந்தேதி தொடங்கும் என வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ந்தேதி தொடங்கியது முதல் இன்று வரை பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை கிடைத்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கர்நாடகாவில் தீவிரமடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணை நிரம்பி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை 120அடியை எட்டியது. தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 689 மி.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணி-931 மி.மீ., தர்மபுரி-763, வேலூர்-748, சேலம்-732, புதுச்சேரி-588, சென்னை நகரம்-493, திருப்பத்தூர்-541, கட லூர்-512 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையை விட அதிகமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது....

போட்டோ - http://v.duta.us/2XQ84AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Zb-XHAAA

📲 Get Chennainews on Whatsapp 💬