புதுப்பாக்கம் சட்டக் கல்லூரிக்கு பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் கடும் அவதி
சென்னை. அக்.9. புதுப்பாக்கம் சட்டக் கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் படிக்கும் சட்டக்கல்லூரி சென்னை அருகே பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி உள்ள புதுப்பாக்கத்திலும், 3 ஆண்டுகள் படிக்கும் கல்லூரி திருவள்ளூரை அடுத்த பட்டரை பெரும்புதூரிலும் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடக்கின்றன. கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கத்தில் செயல்படும் 5 ஆண்டு சட்டக்கல்லூரியில் 1250 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
முன்பு சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையில் கல்லூரி இருந்ததால், எந்த பகுதியில் இருந்தும் நேரடி மாநகர பஸ் வசதி இருந்தது. மேலும் செங்கல்பட்டு, தாம்பரம், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னை கடற்கரை வரை மின்சார ரயில் வசதியும் இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. தற்போது சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான புதுப்பாக்கத்தில் கல்லூரி அமைக்கப்பட்டதால் போதிய பஸ் போக்குவரத்து வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் அடையாறு, தி.நகர், கோயம்பேடு, உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மாநகர பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்த பஸ்கள் அனைத்தும் புதுப்பாக்கத்தில் கல்லூரி அமைந்த இடத்துக்கு செல்வதில்லை....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/f6ACVwAA