பாரம்பரிய விழாவில் நடந்த பெண் பார்க்கும் படலம் குடிநீர், வாறுகால், சாலை இல்லை... உலக்குடிக்கு எப்போதுதான் விடிவு
திருச்சுழி, அக். 9: நரிக்குடி அருகே, உலக்குடி கிராமத்தில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தில் 700 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பல மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மற்ற புழக்கத்திற்கான தண்ணீர் இல்லை. தெருக்களில் சாலை வசதியில்லை. வாறுகால் இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. சுகாதார வளாகம் இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். சில தெருக்களில் வாறுகால் தூர்வராதப்படாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊர்ப்பகுதி ஓடையும் தூர்வாரப்படவில்லை. குப்பைகளை அள்ளாமல் மலை போல் தேங்கி கிடக்கிறது. இதனால், மழைக்காலங்களில் தூர்நாற்றம் வீசுகிறது.
தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உலக்குடி கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாண்டியம்மாள் என்பவர் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் மூடிக்கிடக்கிறது. இதனால், பகல் நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு பெண்கள் அவதிப்படுகிறோம். மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை மாற்றி அமைக்கக்கோரியும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/g0WgSAAA