பெரியபாளையம் அருகே குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

  |   Tiruvallurnews

ஊத்துக்கோட்டை, அக். 9: பெரியபாளையம் அருகே குடிதண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரியபாளையம் அருகே வண்ணாங்குப்பம் கிராமத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 2 நாட்களாக சரிவர குடிதண்ணீர் வரவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆயுத பூஜை என்பதால், அப்பகுதி மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜை செய்ய தண்ணீர் அவசியம், ஆனால் 3வது நாளாக நேற்றும் முன்தினமும் தண்ணீர் வரவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் கிராம சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அரசு விடுமுறை என்பதால் ஊராட்சி செயலர் வரவில்லை. ஆகையால், இன்னும் 2 நாட்களில் தண்ணீர் கிடைக்க ஊராட்சி செயலர் ஏற்பாடு செய்யாவிட்டால் பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம் என மறியலில் ஈடுபட்டவர்கள் முடிவு செய்து பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், வண்ணாங்குப்பம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Ydb3DwAA

📲 Get Tiruvallurnews on Whatsapp 💬