புற்றீசல்களாய் பெருகிவிட்டன பயிற்சி மையங்கள் முறைப்படுத்தப்படுமா?

  |   Dindigulnews

பழநி, அக்.9: புற்றீசல்களாய் பெருகும் போட்டித்தேர்வு மையங்களை முறைப்படுத்த வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இயந்திரம் பழுதடைந்து விடாமல் தொடர் சங்கிலிபோல் தடையின்றி இயங்க வேண்டுமானால் அதற்கு அதிகாரிகள் ரத்தம் போன்றவர்கள். அரசு அதிகாரிகள் சரியாக இயங்கவில்லை என்றால் அரசாட்சியே ஸ்தம்பித்து விடும். அப்படிப்பட்ட அதிகாரிகளை தேர்வு செய்யும் பொறுப்பை தேர்வாணையங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்துவிட்டால் ஊர் ஊருக்கு புதிது புதிதாய் பயிற்சி மையங்கள் தோன்றுகின்றன. மாணவர்களின் எதிர்கால கனவை முதலீடாகக் கொண்டு கல்லா கட்ட பயிற்சி மையங்கள் என்ற பெயரில் பல வியாபாரிகள் தோன்றுகின்றனர். போட்டித்தேர்வுகள் குறித்து புரிதல்கள் இல்லாததாலும், கல்வியியலில் முதல்தலைமுறையினர் என்பதாலும் ஏழை, எளிய மாணவர்கள் இதுபோன்ற பயிற்சி மையங்களை நாடுகின்றனர். நமது நாட்டில் பயிற்சி மையங்கள் துவங்குவதற்கு எந்த அனுமதியோ, பதிவோ தேவையில்லை என்ற நிலை உள்ளது. இதனால் நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களில்கூட புற்றீசல்கள் போல் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/VsvvzQAA

📲 Get Dindigulnews on Whatsapp 💬