பால்குட ஊர்வலம் பெட்ரோல் பங்கில் ரூ.18 லட்சம் முறைகேடு 7 பேர் மீது வழக்குப்பதிவு
பரமக்குடி, அக்.9: பரமக்குடி மேலாய்குடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்கு காட்டாமல் 18 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, 2 பெண் ஊழியர்கள் உன்பட 7 பேர் மீது எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பரமக்குடி நேரு நகரை சேர்ந்த சார்லஸ் மேலாய்குடியில் பெட்ரோல் பங்கு நடந்தி வருகிறார். பங்கில் மேலாய்குடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், பிரபா, கணேசன் உள்ளிட்டவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், தொடர்ந்து பெட்ரோல் பங்கில் முறையாக கணக்கு கொடுக்காமல் முறைகேடு நடந்து வந்துள்ளதாக தெரிகிறது.
நேற்று பங்கு உரிமையாளர் சார்லஸ் ஊழியர்களிடம் வரவு செலவு குறித்து விசாரித்தார். அப்போது, ஊழியர்கள் முன்னுக்கு பின் முரணாக கணக்கு கொடுத்துள்ளனர். தொடர்ந்து கணக்கு பார்த்த போது கடந்த ஓராண்டுகளாக உரிமையாளருக்கு தெரியாமல் ஊழியர்கள் ரூ.18 லட்சம் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பெட்ரோல் பங்கு உரிமையாளர் சார்லஸ் எமனேஸ்வரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பெட்ரோல் பங்கு பெண் ஊழியர்கள் பிரபா,பாண்டியம்மாள் உள்பட வேல்முருகன், கணேசன், குமார், கோபி, பழனி ஆகிய 7 பேர் மீது எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/k-jdIgAA