பழநி அருகே அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல்: 20 பேர் காயம்

  |   Dindigulnews

பழநி, அக்.9: பழநி அருகே ஆயக்குடியில் அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பழநி அருகே ஆயக்குடி பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை தனியார் டவுன் பஸ் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மதுரை நோக்கி செல்லும் தனியார் பஸ் நின்று கொண்டிருந்த பஸ்சை முந்த முயன்றது. எதிரில் வாகனம் வரவே மதுரை சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த தனியார் டவுன் பஸ் மீது மோதியது. அப்போது அவ்வழியாக வந்த கேரளா மாநில சுற்றுலா பஸ் மதுரை செல்லும் தனியார் பஸ்சின் பின்புறம் மோதியது. அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் கீழும், மேலும் விழுந்தனர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமும், பிற வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அடுத்தடுத்து பஸ்கள் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/UaYr1AAA

📲 Get Dindigulnews on Whatsapp 💬