🏛மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திடீர் 🌊வெள்ளப்பெருக்கில் சிக்கிய 👥51 பேர் மீட்பு👍

✍இளவேனில்🌄

🏛மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் அருகாமையில் உள்ள 🌊பவானி ஆற்றின் நடுவே சுமார் 👥51 பேர் இயற்கையை அழகை ரசித்துக்🙂 கொண்டிருந்ததாக கூறப்படுகிறது🗣. இந்நிலையில் பில்லூர் அணையில் இருந்து 💦தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது😨. இதனால் 🌊ஆற்றின் நடுவே இருந்த அனைவரும் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்😯. அந்த மேடான பகுதிக்கு இருப்புறத்திலும் 💦வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது😱. இது குறித்து தகவல் அறிந்த 🚒தீயணைப்பு துறையினர், அங்கு விரைந்து சென்று, ⛵பரிசல் இயக்குபவர்களின் உதவியுடன் முதலில் 👶குழந்தைகள் 👩பெண்கள் ஆகியோரை மீட்டனர். இதற்கிடையில், இரவு ஆனதாலும் 🌊ஆற்றில் ஆர்ப்பரித்த வெள்ளப்பெருக்காலும் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது😳. இருப்பினும் ⌚மூன்று மணி நேரமாக நடந்த மீட்புப் பணிகளில் 51 பேரையும் முழுமையாக மீட்டேடுத்துனர்😌.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬