மூணாறு எஸ்டேட்டில் நடந்த குழந்தை கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்குகிறதா போலீஸ்!

  |   Theninews

மூணாறு, அக்.9: மூணாறில் உள்ள குண்டுமலை எஸ்டேட் பகுதியில் 8 வயது குழந்தை கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில், கொலையாளியை பிடிக்க போலீசார் காலம் தாழ்த்துவதாக புகார் எழுத்துள்ளது. மூணாறில் உள்ள குண்டுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள அப்பர் டிவிஷனில் வசித்து வருபவர் பாண்டியம்மாள். இவரது மகள் அன்பரசி (8). கடந்த மாதம் 9ம் தேதி பாண்டியம்மாள் மற்றும் கணவர் எஸ்டேட் வேலைக்கு சென்றிருந்த வேளையில், கழுத்தில் கயிறு இறுகி இறந்த நிலையில் அன்பரசி பிணமாக கிடந்தார். சம்பவம் குறித்து மூணாறு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போலீசாரிடம் ஊஞ்சல் விளையாடும் போது கயிறு கழுத்தில் இறுகி சிறுமி இறந்ததாக உறவினர்கள் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சிறுமியின் உடலை உடனடியாக உடல்கூறு பரிசோதனை செய்ய கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்கூறு பரிசோதனை முடிவில் சிறுமி கொலை செய்யப்பட்டதும், பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது. இந்நிலையில் மூணாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் ராஜக்காடு உடும்பன்சோலை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 11 பேர் அடங்கிய குழு குண்டுமலை பகுதியில் கொலையாளியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர் குழு சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைகள் மேற்கொண்டு குண்டுமலை பகுதியில் குடியிருக்கும் தொழிலாளர்களிடம் விசாரணை செய்தும் கொலையாளியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் கொலையாளி குறித்து சிறிய தகவல் கூட கிடைக்காதது போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ZP2NTwAA

📲 Get Theninews on Whatsapp 💬