மதுரை ஜிஹெச்சில் தீபாவளி போனஸ் எதிர்பார்ப்பில் தனியார் நிறுவன தொழிலாளர்கள்

  |   Madurainews

மதுரை, அக். 9: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகளில் பணிபுரியும் தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்களுக்கு இந்தாண்டாவது தீபாவளி போனஸ் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மதுரையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு போன்ற இடங்களில் தனியார் நிறுவன பணியாளர்கள் 600க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். துப்புரவு, நோயாளிகளுக்கான சேவை, செக்யூரிட்டி போன்ற பணிகளில் உள்ள இவர்களில், பெண் பணியாளர்கள் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் இவர்களுக்கு, போனஸ் உள்ளிட்ட எவ்வித அடிப்படை சலுகைகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக தீபாவளி போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் போன்றவை கூட, கடந்த 4 ஆண்டுகளாக கிடைக்கவில்லை என்கின்றனர் ....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/44IprQAA

📲 Get Madurainews on Whatsapp 💬