மதுரை மாநகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டுமானங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கவும் ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை, அக். 9: மதுரை மாநகராட்சிப் பகுதியில் அனுமதியற்ற, விதிமீறல் கட்டுமானங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழுவையும், தேவைக்கேற்ப புதிய பணியிடங்களையும் உருவாக்கவேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் நலச் சங்கத் தலைவர் முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: மதுரை மாநகராட்சியில் தற்போது போதுமான அளவுக்கு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் இல்லை. காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன. திடக்கழிவு மேலாண்மை பணிக்கென தனி அலுவலர்கள் இருந்தாலும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்களும் இந்த பணிகளில் ஈடுபட வேண்டுமென மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் காலியிடத்தால் பணிகள் பாதித்துள்ளன. எனவே, திடக் கழிவு மேலாண்மை திட்ட அரசாணைப்படி இதற்குரியவர்களைக் கொண்டே பணிகள் மேற்கொள்ளவும், எங்களை அந்த பணிகளில் ஈடுபடுத்தும் மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மனு செய்திருந்தோம்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ''பணி ஒதுக்கீடு என்பது நிர்வாக பொறுப்புடையது. இதை தனியுரிமையாக கோரமுடியாது. நிர்வாகம் சார்ந்த முடிவில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மனுதாரர் தங்களது கோரிக்கை குறித்து சம்பந்தபட்டவர்களிடம் தான் முறையிட வேண்டும். மதுரை மாநகராட்சியில் லஞ்சம் அதிகளவில் உள்ளது. மாநகராட்சி சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்க எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி சொத்துக்களை மீட்க வேண்டும். இதற்கு மதுரை மாநகராட்சியில் உள்ள லஞ்சம் மற்றும் கண்காணிப்பு பிரிவை பலப்படுத்த வேண்டும். மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் விஜிலென்ஸ் மையங்களை திறந்து, சிசிடிவி காமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். ரகசிய சோதனைக்காக சிறப்பு குழு அமைக்க வேண்டும். இவை மாநகராட்சி கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/xnTyXAAA