🏛மாமல்லபுரத்திற்குள் 🚗4 சக்கர வாகனங்களுக்கு தடை🚫

✍இளவேனில்🌄

பிரதமர் மோடி மற்றும் ✈சீன அதிபர் 🤵ஜி ஜின்பிங் இருவரும் வருகிற 📆12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை🗣 நடத்துகின்றனர். இந்நிலையில் தலைவர்களின் 💪பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் 🚗4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது🚫. மாமல்லபுரம் நகரத்திற்குள் இருந்த 🚏பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு 🌊கடற்கரை 🛣சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஒரு வாரகாலமாக மாமல்லபுரம் நகரத்திற்குள் செல்லும் 🚐வாகனங்களையும் 👮போலீசார் முழு சோதனைக்கு👀 பின்னரே அனுமதித்தனர். தொடர்ந்து இன்று காலை முதல் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் 👥பொதுமக்களும் மாமல்லபுரம் நகரத்திற்கு செல்ல கிழக்கு கடற்கரை 🛣சாலை மாமல்லபுரம் நுழைவாயிலிருந்து 🚶நடை பயணமாக செல்கின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬