மருத்துவமனையில் சிகிச்சை எலக்ட்ரீசியன் வீட்டில் தீ ரூ.2லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

  |   Thiruvarurnews

முத்துப்பேட்டை, அக்.9: முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சக்தி(40) . எலக்ட்ரீசியன் .இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இவரது வீட்டில் சக்தியின் தயார் மற்றும் சகோதரி அவரது மகள் ஆகியோர் வீட்டின் முன் பகுதியில் பூ கட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் கொட்டகை எரிந்ததை கண்டு அருகில் வசிப்பவர்கள் கூச்சலிட்டனர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென பரவி வீட்டின் மேல் கூரையிலும் பட்டு எரிந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாகின. இதன் மதிப்பு 2லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/67RTJwAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬