மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி3

  |   Kanchipurannews

கூடுவாஞ்சேரி, அக். 9: வண்டலூர் அடுத்த ஓட்டேரி விரிவு பகுதி, கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஹரிபாபு (40). கூலி தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் (14). வண்டலூரில் உள்ள தனியார் மாற்றுத் திறனாளி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 3ம் தேதி ராஜேஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் நேற்று முன்தினம் இறந்தான். இதையடுத்து, மாணவனின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்பகுதியில், டெங்கு காய்ச்சலால் மாணவன் இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் வந்தனர். பின்னர், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, உயிரிழந்த மாணவனுக்கு டெங்கு பாதிப்பில்லை என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/D8r22AAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬