மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் சரிவு

  |   Tiruppurnews

திருப்பூர்,அக்.9:திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவில் உள்ளது என்பதை, பொதுப்பணித்துறை, மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் கண்காணித்து வருகிறார்கள். பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில் இருக்கும் கிணறுகளில் இருக்கும் நீர்மட்டம், முந்தைய ஆண்டு, இதே கால கட்டத்தில் இருந்த நீர் மட்டத்துடன் ஒப்பிடப்பட்டு ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிட்டனர். குறிப்பாக கடந்த மாதம் நடத்திய ஆய்வில் திருப்பூர் மாவட்டத்தில் 0.14 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்நிலைக்கு காரணம் திருப்பூரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டாமல், மழை நீரை திறந்த வெளியில் விடுகின்றனர். இதனால் மழை நீரில் பெரும்பகுதி வீணாகின்றது.

இது குறித்து சமூக ஆர்வலர்ள் கூறுகையில்: அரசாங்கத்தின் சார்பில் வீட்டிற்கு வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதனை கராராக அமல்படுத்துவதில் மெத்தனப்போக்கு நிலவுகிறது. சில இடங்களில் மட்டுமே முறையாக மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து அதன் மூலமாக மழை நீரை சேகரித்து வருகின்றனர். பல இடங்களில் மழை நீர் வீணாகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் சீர்படுத்தி நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/JqEbQgAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬