லேப்டாப்பில் ஷாக் பிரபல நிறுவனத்துக்கு 93 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

  |   Chennainews

சென்னை: புதிய லேப்டாப்பை உபயோகிக்கும் போது ஷாக் அடித்த விவகாரத்தில் பிரபல நிறுவனத்துக்கு 93 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ரபியா. இவர், கடந்த 2013ம் ஆண்டு பிரபல நிறுவனத்தின் தரப்பில் கொடுக்கப்பட்ட விளம்பரங்களை பார்த்து லேப்டாப் ஒன்று 78 ஆயிரத்து 900 கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய லேப்டாப்பை சார்ஜரில் இணைத்து உயயோகப்படுத்தியுள்ளார். அப்போது ஷாக் அடித்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரபியா, வாரண்டி உள்ளதால் லேப்டாப் வாங்கிய ஷோரூமை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் எந்த சரியான பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதனைதொடர்ந்து சில தினங்கள் கழித்து, லேப்டாப் நிறுவனம் சார்பில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஒருவர் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். பின்னர் லேப்டாப் மற்றும் சார்ஜரை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார். இதனால் ரபியாவும் புகைப்படம் எடுத்து மெயில் அனுப்பி உள்ளார். ஆனால் 3 முறை மெயில் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரபியா, தனக்கு உரிய இழப்பீடும், லேப்டாப் வாங்கிய பணத்தை திருப்பி வழங்கவும் உத்தரவிடக்கோரி சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது....

போட்டோ - http://v.duta.us/dLudMAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vR-JvwAA

📲 Get Chennainews on Whatsapp 💬