🌊வைகை அணையில் இருந்து 💦நீர் திறப்பு👍

✍இளவேனில்🌄

🏛தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 🌊வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி ⛰மலைப்பகுதிகளில் பரவலாக ☔மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு 💦நீர் வரத்து ⏫அதிகரித்து வந்த நிலையில், பெரியார் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழுள்ள, ஒரு போக பாசன நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறந்துவிட 🏛தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமி கடந்த 📆5 தேதி உத்தரவிட்டார்⚖. இதனையடுத்து, 📆இன்று முதல் 120 நாட்களுக்கு 🌊வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மூன்று 🏛மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் 🌾விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக 💦நீர் திறந்து விடப்பட்டுள்ளது👍. வைகை அணையில் இருந்து ⌚வினாடிக்கு 1130 கன அடி நீரை, 🏛தேனி மாவட்ட ஆட்சியர் 💺பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்👏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬