வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்
புதுச்சேரி, அக். 9: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்குபருவமழை இவ்வாண்டு வரும் 20ம்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பிரதேசங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெருமழை புயல் மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு புதுவை மாவட்ட கலெக்டரும், வருவாய்- நிவாரணம் மற்றும் புனரமைப்பு செயலருமான அருண் தலைமையில் வடகிழக்கு பருவமழைக்கான ஆயத்த நிலையை உறுதி செய்வதற்கான பல்வேறு துறைகள் மற்றும் அவசரகால ஆதரவு அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பருவமழை காலத்தில் செய்யப்பட வேண்டிய செயல்களை உடனடியாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன்படி,பொதுப்பணித்துறை நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சாலைகள், கால்வாய்கள் மற்றம் வாடிகால்களை பருவமழை தொடங்குவதற்கு முன் செப்பனிடவும், தூர்வாரவும் வேண்டும். மின்கம்பங்கள், மேல்நிலை மின் கடத்திகள் மற்றும் சந்தி பெட்டி போன்வற்றை முறையாக மின்துறை பராமரிக்க வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர பலகை மற்றும் பதாகைகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். நோய் பரப்பும் காரணிகளின் வாயிலாக பரவும் நோய்களை தடுத்து முறையான சிகிச்சையளிக்கவும், ஆம்புலன்ஸ் வசதிகள் 24 மணி நேரமும் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பை மீன்வளத்துறை உன்னிப்பாக கவனித்து உறுதி செய்ய வேண்டும்....
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/t54wcgAA