விரைவாக போனஸ் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

  |   Tiruppurnews

திருப்பூர், அக்.9:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் போனஸ் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நிட்டிங், டையிங், வாசிங், காம்பேக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி,எலாஸ்டிக், காஜா-பட்டன் உட்பட பல்வேறு வகையான ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில், தமிழகம் மற்றும் வெளிமாநில தொழிலாளர் மொத்தம் 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி வருவதால் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்கள் விரைவில் போனஸ் வழங்க உள்ளனர். கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் வழங்கவேண்டும் என, தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நிதி நிலைக்கு ஏற்ப, நிறுவனங்கள் போனஸ் வழங்க, தொழில் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. பண்டிகை நெருங்கும் நிலையில், பின்னலாடை நிறுவனங்கள், போனஸ் பட்டுவாடாவுக்கு தயாராகி வருகின்றன. தொழில் நிறுவனங்கள் பல்வேறு வகைகளில், சம்பளத்துடன் போனஸ் வழங்க தேவையான நிதியை சேகரித்து வருகின்றனர். ஆயுதபூஜை முடிந்த நிலையில் வரும் 12ம் தேதி முதல், பின்னலாடை தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்குகிறது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/v6hK-AAA

📲 Get Tiruppurnews on Whatsapp 💬